|
|
யாழ்ப்பாணத்திற் பழைமையும், பெருமையும் வாய்ந்த பதிகளுள் ஒன்றாக விளங்குவது உரும்பிராய். யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பலாலி வீதியில் ஐந்தாவது கல்லை மத்தியாகக் கொண்டு இக் கிராமம் அமைந்திருக்கிறது. இக்கிராமத்துக்கு உரும்பிராய் என்று பெயர் வரக்காரணம் யாது எனப் பலரும் வினாவுவதுண்டு. இடப்பெயர் ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இவ்வூருக்கான பெயரின் காரணம் நன்கு விளக்கப்பட்டதாக தெரியவில்லை. ஒருகாலத்தில் வழிபோக்கரின் நலன்கருதித் தெருவோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டியும் சுமை தாங்கிகளை அமைத்தும் அரசு வசதி செய்து வைத்ததாகத் தெரியவருகிறது. வாகன வசதி மிகமிகக் குறைந்திருந்த காரணத்தினால் நெடுந்தூரம் நடந்தே தமது பிரயாணத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டிருந்தது. பிரயாணம் செய்பவர்கள் மரநிழல்களில் தங்கிச் சிறிது களைப்பாறிய பின்னர் பிரயாணத்தை மேற்கொள்ளுவர். மேற்கொள்ளுவார். பொருள்களைப் பொதியாகக் கட்டித் தலைச் சுமையாகவே கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இப்பொழுதும் அந்தக் காட்சியை நாம் அவதானிக்கலாம் சுமந்து செல்லும் பிரயாணிகள் பிறருடைய உதவியின்றியே பொதிகனைச் சுமை தாங்கியில் வைத்து விட்டுச் சிறிது சேரம் ஆறிச் செல்வதுமுண்டு. எந்தச் சுமைகளையும் தாங்கும் சக்தி அந்தச் சுமைதாங்கிகளுககு எண்டு. ஆரம்பத்தில் வைரக் கற்களினாலும் பின்னர் சீமெந்து கொண்டும் உறுதியாகச் சுமைதாங்கிகளை நிறுவினார்கள் அப்படியான பழைய சுமைதாங்கிகளை இன்றும் சில இடங்களில் தெருவோரங்களிற் காணலாம்.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட வீரர்கள், சவாரிப் பிரியர்கள், இசைவிற்பன்னர்கள், நடிகர்கள், என்றினோரன்னவர்கள் இக் கிராமத்துக்குப் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர். அந்தக் காலத்தில் சிங்கங்கண்டி, நீதவான் பங்கு முதலிய இடங்களே விளையாட்டு மைதானங்கள் இம் மைதானங்களில் உதைபந்தாட்ட வீரர்கள் நல்ல பயிற்சி எடுப்பதுடன் அயலூர் அணிகளை எதிர்த்து உதைந்தாட்டத்தில் கலந்து கொண்ட சந்தர்ப்பங்கள் பல. யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் உதைந்தாட்டங்களிலும் உரும்பிராய் வீரர்கள் பங்குபற்றி விறுவிறுப்புடன் விளையாடியதுண்ட வேகமாக விளையாடும் பொழுது உரும்பிராய் வீரர்களைப் பார்த்து ‘உரும்பிராய்க் கிழக்கு” என்று எதிரணியைச் சார்ந்த ரசிகர்கள் கூக்குரலிடுவது வழக்கம். (மரவள்ளிக்கிழங்குக்கும்; பேர் போன இடம் உரும்பிராய்) போட்டியில் உரும்பிராய் வீரர்கள் வெற்றி கொண்டுவிட்டார்களென்றால் வெற்றிக்கு அடையாளமாக இரசிகர்கள் தாம் அணிந்திருக்கும் சால்வைகளை வானத்திலே வீசி வீசித் துள்ளிக் குதித்துக் குதூகலிப்பார்கள். இந்தக் குதூகலக் காட்சியோ வெகு இரம்மியமாக இருக்கும்.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானில் நனி சிறந்தனவே” இது ஒரு பொன்மொழி. ஒவ்வொருவருக்கும் தமது நாட்டைப்போல், தம்மைப்பெற்ற தாயைப் போல் உலகில் சிறப்பும், இன்பமும் தருவது வேறொன்றுமில்லை. ஈழவளத் திருநாட்டின் யாழ்ப்பாண மாநகரில் வீரமும் தியாகமும் உள்ள கிராமம் என்றால் அது உரும்பிராயையே குறிக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு ஊருக்கும் அவற்றிற்கென தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன. அதேபோல்த்தான் நான் பிறந்த உரும்பிராய் மண்ணுக்கும் தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன.
ஆக்கம் - ரமா Source:- http://www.karanthan.com/index20080606.php?mode=Urumpirai&viewdate=2008-06-06-10:06
|
Links |
|