நுழைவாசல்   புகைபடத்தொகுப்பு   விருந்தினர் பக்கம்     நிகழ்வுகள்   துயர்பகிர்வோம்   பெரியார்கள்   பாடல்கள்
           நுழைவாசல்  
          படத்தொகுப்பு  
          அரட்டை பகுதி  
          புகைபடத்தொகுப்பு  
          முக்கிய தலங்கள்  
          விருந்தினர் பதிவு  
          விருந்தினர் பக்கம்  
          இணையங்கள்  
          தொடர்புகட்கு  
          அமைவிடம்  
          ஆக்கங்கள்  
          நிகழ்வுகள்  
          துயர்பகிர்வோம்  
          நினைவஞ்சலி  
          ஊர்கள்  
          மருத்துவக்குறிப்பு  
          பெரியார்கள்  
          தமிழ் எழுத்துக்கள்  
          பாடசாலைகள்  
          பாடல்கள்  
 
 
 
 
மறக்கவொண்ணா மனிதனவன்..!
பூவிலும் மெல்லியதாய்ப் புன்சிரிப்பு
புகுந்து உள்நோக்கிடும் விழிகள்
நாவினில் நறுங்கனிச் சொற்கள்
நாளும் மறக்கவொண்ணா மனிதன்..

காமனை ஒக்கும் சிவபாலனவன் - பொல்லாக்
காமத்தைப் பெரிதென நினையாதவன்
சோமனைப்போல் குளிர்ப் பேச்சினன் - நாளும்
சுறுசுறுப்பான தமிழ்ப் படைப்பாளனவன்..


எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் நினைவாக...
- வி. ரி. இளங்கோவன்.
Posted on 15 Jun 2008 by Urumpirai Admin
எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன்!
ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் ஒரு படைப்பாளியை 23.05.2008 ல் இழந்துள்ளது. இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள
நாயன்மார்கட்டு கிராமத்தில 1954ல்; பிறந்த இவர் வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர். பின்னாளில் 1985 தொடக்கம் பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தார். எவருடனும் பழகுவதற்கு இனிமையானவர். எவரையூம் எளிதில் நண்பராக்கிக் கொண்டுவிடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி.
இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.

Source
முல்லைஅமுதன்
23.05.2008
mullaiamutர்an_03@ர்otmail.co.uk
http://www.geotamil.com/pathivukal/sivalingam_sivapalan.htm
Posted on 14 Jun 2008 by Urumpirai Admin
எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் மறைவு!
பிரான்ஸ் நாட்டில் பல வருடங்களாக வசித்துவந்த எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன் கடந்த 22ம் திகதி (22 -05 - 2008) லண்டனில் காலமானார் என்ற துயரச்செய்தியை கலை இலக்கிய இரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற சிவபாலனுக்கு திடீரென இருதய வருத்தம் ஏற்பட்டது. அதனால் உடன் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. பின்பு அவர் சுகமடைந்து வந்தார். ஆனாலும் 22ம் திகதி திடீரென ஏற்பட்ட மயக்கம் அவரை மீளாத்துயிலில் ஆழ்த்திவிட்டது.

Source
வி. ரி. இளங்கோவன்.
vtelangovan@yaர்oo.fr
http://www.geotamil.com/pathivukal/sivalingam_sivapalan.htm
Posted on 14 Jun 2008 by Urumpirai Admin
திரு கந்தையா புஸ்பரத்தினம்
Posted on 06 Jun 2008 by Urumpirai Admin
Links
Copyright © 2008, Urumparai.Com All rights reserved.   Design & Solution By:-
e Tec Designs