நுழைவாசல்   புகைபடத்தொகுப்பு   விருந்தினர் பக்கம்     நிகழ்வுகள்   துயர்பகிர்வோம்   பெரியார்கள்   பாடல்கள்
           நுழைவாசல்  
          படத்தொகுப்பு  
          அரட்டை பகுதி  
          புகைபடத்தொகுப்பு  
          முக்கிய தலங்கள்  
          விருந்தினர் பதிவு  
          விருந்தினர் பக்கம்  
          இணையங்கள்  
          தொடர்புகட்கு  
          அமைவிடம்  
          ஆக்கங்கள்  
          நிகழ்வுகள்  
          துயர்பகிர்வோம்  
          நினைவஞ்சலி  
          ஊர்கள்  
          மருத்துவக்குறிப்பு  
          பெரியார்கள்  
          தமிழ் எழுத்துக்கள்  
          பாடசாலைகள்  
          பாடல்கள்  
 
 
 
 
உரும்பிராய்க் கிழக்கு
உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட வீரர்கள், சவாரிப் பிரியர்கள், இசைவிற்பன்னர்கள், நடிகர்கள், என்றினோரன்னவர்கள் இக் கிராமத்துக்குப் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர். அந்தக் காலத்தில் சிங்கங்கண்டி, நீதவான் பங்கு முதலிய இடங்களே விளையாட்டு மைதானங்கள் இம் மைதானங்களில் உதைபந்தாட்ட வீரர்கள் நல்ல பயிற்சி எடுப்பதுடன் அயலூர் அணிகளை எதிர்த்து உதைந்தாட்டத்தில் கலந்து கொண்ட சந்தர்ப்பங்கள் பல.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறும் உதைந்தாட்டங்களிலும் உரும்பிராய் வீரர்கள் பங்குபற்றி விறுவிறுப்புடன் விளையாடியதுண்ட வேகமாக விளையாடும் பொழுது உரும்பிராய் வீரர்களைப் பார்த்து ‘உரும்பிராய்க் கிழக்கு” என்று எதிரணியைச் சார்ந்த ரசிகர்கள் கூக்குரலிடுவது வழக்கம். (மரவள்ளிக்கிழங்குக்கும்; பேர் போன இடம் உரும்பிராய்) போட்டியில் உரும்பிராய் வீரர்கள் வெற்றி கொண்டுவிட்டார்களென்றால் வெற்றிக்கு அடையாளமாக இரசிகர்கள் தாம் அணிந்திருக்கும் சால்வைகளை வானத்திலே வீசி வீசித் துள்ளிக் குதித்துக் குதூகலிப்பார்கள். இந்தக் குதூகலக் காட்சியோ வெகு இரம்மியமாக இருக்கும்.

நன்றி
ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
Posted on 05 Jun 2008 by Urumpirai Admin
Links
Copyright © 2008, Urumparai.Com All rights reserved.   Design & Solution By:-
e Tec Designs