பெரியவர்கள்
உரும்பிராய் என்று சொன்னால் கற்றோர் உலகில் பஞ்சலிங்கம் குடும்பத்தினர் பற்றிப் பேசப்டுவது வழக்கம். அவர்களது கல்வி அறிவும் தேச சேவையுமே காரணம் ஆகலாம். செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதியினர் பெற்றெடுத்த ஆண் பிள்ளைகள் ஐவர். சிரேட்டரான திரு பஞ்சலிங்கம் அவர்கள் சிறந்த வைத்தியர். சட்டத்துறையில் முன்னரே பிரபல்யம் பெற்றவர் திரு செ. நாகலிங்கம் அவர்கள். நீதியரசராக இருந்த இவர் சிலகாலம் பதில் தேசாதிபதியாகவும் கடமை புரிந்தவர். இலங்கைத் தமிழரில் இலங்கையின் தேசாதிபதியாக இருந்த பெருமைக்கு உரிய ஒரேயொரு தமிழர் திரு செ. நாகலிங்கம் அவர்களேயாவர்.