சிவபூதநாதேசுவரர் ஆலயம்
உரும்பிராயின் கிழக்கு எல்லையில் வடபுறமாக அமைந்துள்ளது சிவபூதநாதேசுவரர் ஆலயம் நீர்வேலி, கோப்பாய், கரந்தன் கிராமங்களை அண்மித்து இக்கோயில் அமைந்திருப்பதினால் அவ்வூர் மக்களது வழிபாடு இங்கு விசேடமாக இடம்பெறுகிறது.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
ஞானவைரவர் கோயில்
கோப்பாய் வீதியிலே துண்டிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வைரவப்பொருமானைத் துண்டி ஞானவைரவ சுவாமி என்ற திருநாமங் கொண்டு பணிகிறார்கள். துண்டி விசேடம் பெற்றது. சைவபிரசங்கங்கள் புராணபடனங்கள் அந்தக் காலத்தில் ஒழுங்காக நடைபெற்றன.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
கற்பகப் பிள்ளையார் கோயில்
தொழுவார் துயர்தீர்தது அடியார்களுக்கு அருள்புரிகின்றார் கற்பகப்பிள்ளையார். கற்பகப்பிள்ளையார் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் ஓடையம்பதி உயர் தனிச் சிறப்புக்கு உரியது. ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். ஆலய முகப்பில் பஞ்ச தளங்களைக் கொண்ட இராஜகோபுரம் கம்பீரமாக அமைந்திருப்பது அழகுக்கு அழகு தருவதாகும். இவ்வாலயம் ஊர்நடுவில் அமைந்திருப்பதும் ஒருசிறப்பு. இவ்வாலய மஹோற்சவம் ஆனிப்பூரணையைத் தீர்த்தத் தினமாகக் கொண்டு நடைபெறுகின்றது. ஒரு காலத்தில் பத்துத் திருவழாக்களே நடந்தன. இப்பொழுது பதினைந்து திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. அழகிய சித்திரத்தேரும் உண்டு.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
பர்வதவர்த்தனி அம்மன் கோயில்
கிராமத்துக்கு ஒரு அம்மன் கோயில் என்ற பெருமை இக்கோயிலுக்கு உண்டு. பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருளியுள்ள இடமும் பரத்தைப்புலமே. வைகாசிப் பூரணையைத் தீர்த்தநாளாகக் கொண்டு பத்துத் தினங்கள் மஹோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
சிதம்பர சுப்பிர மணிய சுவாமி கோயில்
பரத்தைப்புலம் என்னும் குறிச்சியிலேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒரேயொரு கந்தசுவாமி கோயில் இதுவொன்றேயாகும். ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு நான்கு தசாப்பதங்களாகப் பூசை திருவிழாக்களுடன் நன்கு நடைபெற்று வருகிறது உரும்பிராயில் ஒரு கதிர்காமம் என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கரிகாமத் திருவிழாக்காலத்திலே நடைபெற்று வந்தன. தொடர்ந்தும் இடம்பெறும்.
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
கருணாகரப்பிள்ளையார் கோயில்
யாழ்ப்பாணத்தை அரசுபுரிந்த விஐயகூழங்கைச் சக்கரவர்த்தி காலத்துக்கும் முந்திய பூர்வீக ஆலயம் இதுவாகும். வியகூழங்கைச் சக்கரவர்த்தி கருணாகரப்பிள்ளையாரை வணங்கி அருள்பெற்றதாகவும், திருப்பணிக்கு உதவியதாகவும் சரித்திரம் கூறுகிறது. அந்தணர் பரம்பரையினர் இவ்வாலயத்தைப் பரிபாலித்து வருகின்றார்கள். பழைமையையும் பெருமையையும் எடுத்துக்காட்டும் வகையில் கல்வெட்டுச் சாசனமும் உண்டு. பிரசித்திபெற்ற பிள்ளையார் கோயில்களின் வரிசையில் இவ்வாலயமும் சேர்க்கப்பட்பட்டுள்ளது. (சைவநெறி - ஆண்டு11)
நன்றி ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் - 1992
|